விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ மூலம் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என தெரிகிறது. அவருடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விவேக் ஹர்சன் எடிட்டராக பணியாற்றுகிறார்.

[youtube-feed feed=1]