1
 
“பொது இடங்களில் பிறரை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் விஜயகாந்த் தன் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது குறித்து பொது நல வழக்கு தொடருவோம்” என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவரும், அக் கட்சி அடங்கிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த், பொது இடங்களில் தனது கட்சி எம்.எல்.ஏ, பாதுகாவலர், வேன் டிரைவர், கட்சி பிரமுகர் என்று பலதரப்பட்டவர்களையும் அடிப்பது, உதைப்பது, கொட்டுவது, அறைவது போன்ற அநாகரீக நடவடிக்கையில தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பத்திரிகையாளரகளையும் விடவில்லை.  தூ என்று துப்பினர். “நாய்களா..” என்றார். “அடிச்சி தூக்கிருவேன்” என்றார்.
விஜயகாந்தின் இந்த விபரீத நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தின. இதையடுத்து கோவை அருகில் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒரு வார காலம் தங்கி யோகா பயிற்சி எடுத்தார்.
“இப்போது மனமும் உடலும் இயல்பாக உள்ளது” என்று பேட்டி கொடுத்தார். இதையடுத்து இனி, யாரையும் தாக்க மாட்டார் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால், அடுத்த நாளை வழக்கம்போல் தனது அதிரடியில் இறங்கிவிட்டார்.
சமீபத்தில்கூட நெல்லையில், தனது பாதுகாவலரை முதுகில் அறைந்தார்.
தொடர்ந்து இப்படி விஜயகாந்த் செயல்படுவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “ பொது இடங்களில் நீங்கள் தொடர்ந்து பலரை தாக்கி வருகிறீர்கள். ஒரு தலைவருக்கு இது அழகல்ல. இனியும் இது போல நடந்துகொண்டீர்களானால் பொது நல வழக்கு தொடருவோம்” என்று எச்சரித்துள்ளார்.