திண்டுக்கல்,
எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஸ்டாலின் விவேகமில்லாதவர் என்றும், விஜயகாந்த் எம்ஜிஆர், ஜெவை திட்டியதால்தான் பேச முடியாமல் அவதிப்படுகிறார் என்றும் கூறினார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
” தமிழகத்தல் நடிகர்கள் சிலர் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு காண்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகர்களும் தமிழகத்தை ஆள முடியாது என்ற அவர், கருப்பு எம்ஜிஆர் என்று தன்னை அழைத்துக் கொண்டு நாட்டையே வலம் வந்த அவரால் தற்போது கட்சியை நடத்த முடியவில்லை என்றும், குறிப்பிட்டார். எம்.ஜிஆர், ஜெயலலிதாவை திட்டியதால் தான் தற்போது பேச முடியாமல் அவதிப்படுகிறார் என்று கூறினார்.
மேலும், அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான் என்றும், ‘ இதன் பினாமியாக சிலர் செயல்பட்டு 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். இது ஒரு காலம் நடக்காது. தனி மனிதன் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது.
தி.மு.க. உள்பட எதிர்கட்சிகள் இந்த ஆட்சியில் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றார்.
“தற்போது பஸ் கட்டணம் உயர்ந்து விட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் குறைவே என்ற அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக பல கோடி விரையம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ரூ.1000 கோடிவரை தமிழ்செம்மொழி மாநாட்டிற்கு விரையம் செய்தனர் என்ற அவர், சட்டபேரவையில் ஆக்கப்பூர்வமான கேள்வியை கேட்காமல் பேசி வரும் மு.க.ஸ்டாலின் விவேகம் இல்லாத அரசியல்வாதி.
இவ்வாறு அவர் பேசினார்.