‘இந்தியன் 2’ முடித்துவிட்டு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். இந்த படம் ‘தேவர் மகன்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கமலுடன் நடிக்க வடிவேலு மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கமல் – விஜய் சேதுபதி இருவரும் நேரலையில் உரையாடினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.
இதற்கிடையில் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காகவே கமல் – விஜய் சேதுபதி நேரலைக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்கப்பட்டது என செய்தி பெரும் வைரலாக பரவி வருகிறது.

[youtube-feed feed=1]