லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்த “மாநகரம்” அவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு அடையாளத்தை கொடுத்தது.

மாநகரம் படத்தை “மும்பைகர்” என்ற பெயரில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில், இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

தீபிகா படுகோனே ஜோடியாக ‘சப்பக்’ என்ற இந்தி படத்தில் நடித்த விக்ராந்த் மசே, மும்பைகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியை, விக்ராந்த், வானளாவ புகழ்ந்து தள்ளுகிறார்.

“விஜய் சேதுபதி, இந்த தலைமுறையின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவரை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். அவருடன் பணி புரிவது பெருமையாக உள்ளது. இன்னும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை. எனது போர்ஷன் தனியாக எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாங்கள் சேர்ந்து நடிப்போம்” என்ற விக்ராந்த், “மும்பைகரில் எனது ரோல் குறித்து சொல்ல மாட்டேன். கோபக்கார இளைஞனாக இந்த படத்தில் வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]