நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் – பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தாடியுடன் இருக்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.