லண்டன்
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திரும்பச் செலுத்தவில்லை.
அதற்கான நடவடிக்கைகளுக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடி லண்டன் நகரில் குடியேறினார்.
அவரை மீண்டும் கொண்டு வந்து விசாரணை நடத்த இந்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
மீண்டும் இந்தியாவுக்கு வர மறுத்து அவர் தொடர்ந்து வழக்காடி வருகிறார்.
பிரிட்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயினும் சில சட்ட நடவடிக்கைகளால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியாமல் உள்ளது.
இன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் மல்லையா தனது டிவிட்டரில் சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஒரு சிலர் வரவேற்று பின்னூட்டம் இட்டுள்ளனர்.
ஒரு சிலர் அவர் கடனை திருப்பி செலுத்தாதது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.