சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாகை திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தவெகவின் கோரிக்கையை ஏற்று, அவர் சுற்றுப்பயணம் செய்யும் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

“மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.  இன்று காலை 11மணி அளவில் நாகையில் அவரது பிரசார பயணம் தொடங்க உள்ளது. இதையடுத்து இன்று காலை 8.30 மணி அளவில் விஜய், அவரது பனையூர் இல்லத்தில் இருந்து விமான நிலையம் புறப்பட்டார். அங்கிருந்து தனி விமானத்தில் திருச்சி செல்லும் விஜய், அங்கிருந்து கார் மூலம் நாகை செல்கிறார்.

 இன்று காலை 11 மணி அளவில்,  நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகேயும், தொடர்ந்து,  திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, தொண்டர்களின் பாதுகாப்புக்காக,  நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,   விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.

சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்…  ! திருச்சி அரியலூரை அதிரவிட்ட விஜய்

தவெக தலைவர் விஜயின் நாளைய சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு…