’சக்க போடு போடும் ராஜீவ் காலத்து ராமாயணம்’
தூரதர்ஷனில் சக்க போடு போட்டுக்கொண்டிருக்கிறது, ’ராமாயணம்’.
ராமாயண காவியத்தைத் தழுவி, ராமானந்த் சாகரால் டைரக்ட் செய்யப்பட்ட ‘ராமாயணம்’ சீரியல் 33 ஆண்டுகளுக்கு முன்பு (1987-88) தூரதர்ஷனில் ஒளி பரப்பப்பட்டு ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் ஒளிபரப்பாகும் ராமனின் கதைக்கு அதே ‘ரீ- ஆக்ஷன்’ இப்போதும்.
நாடு தழுவிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருப்பதால், நாட்டு மக்கள் பொழுதைக் கழிக்க, கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ராமாயண சீரியலை மீண்டும் தூரதர்ஷன் ஒளிபரப்புகிறது.
முதல் நாள் முதல் ‘ஷோவை’ 40 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.
நேயர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கடந்த ஞாயிறு அன்று, இந்த தொடரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர், என்கிறது, ‘பார்க்’ என்ற ஒரு நிறுவனம்.
எந்த டி.வி.யில்., யார், யார் , என்னென்ன நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை ‘பார்க்’ நிறுவனம் கணக்கிட்டு வருகிறது.
பார்வையாளர் எண்ணிக்கை மட்டுமல்ல, இந்த தொடரின் இடையே, காண்பிக்கப்படும் வணிக விளம்பரங்களும், அதிகரித்து வருகின்றன.
– ஏழுமலை வெங்கடேசன்