பீஜிங்

சீனா சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாக வியட்நாம் குற்றம் சாட்டி உள்ளது.

சீனா தென் சீனக்கடலின் முழு பகுதியையும் தனக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுகிறது.  கடந்த 1974-ம் ஆண்டு வியட்நாமின் பாராசெல்ஸ் தீவைச் சீனா கைப்பற்றியது.

ஆயினும் அங்குள்ள டிரைடன் தீவுக்கு வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

அந்த பகுதியில் ஹெலிபேட் மற்றும் ரேடாருடன் சிறிய துறைமுகத்தையும் சீனா பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளது.  தற்போது அந்த தீவில் விமான ஓடுபாதையைச் சீனா கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது.

எனவே சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுவதாக வியட்நாம் குற்றம் சாட்டியது. இதனை மறுத்துள்ள சீனா தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விரும்பியபடி செய்ய உரிமை உள்ளதாகக் கூறி உள்ளது.