பெய்ஜிங்:

உயிரினங்களை சாப்பிடுவதில் சீனர்களுக்கு அதிக விருப்பம், பாம்பு கறி, குரங்கு ரத்தம், தவக்களை என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அவற்றை விதவிதமாக சமைத்து சாப்பிடுவதிலும் சீனர்களை மிஞ்ச ஆள் இருக்காது என்று கூறலாம். இது தற்போதும் நிரூபனம் ஆகியுள்ளது.

சீனாவில் தற்போது நண்டு சீசன். இதனால் நண்டு வரத்து அதிகரித்துள்ளது. நண்டுகளை விதவிதமாக வறுத்தும், குழம்பு வைத்தும், கிரேவி செய்தும் சீன சமையல் கலை வல்லுனர்கள் அசத்துகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் ஒரு சமையல் கலை வல்லுனர் நண்டு சமையல் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

34 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஒரு சூடான எண்ணெய் நிறைந்த சட்டியில் மசாலா தடவிய ஒரு உயிருள்ள நண்டை அதில் போடுகிறார். உயிருடன் உள்ள அந்த நண்டு எண்ணெயில் மிதந்து கொண்டே சட்டியில் உள்ள மிளகாய், வெங்காயம், தக்காளி போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டே கொதிக்கும் எண்ணெயில் வறுபடுகிறது.

இந்த வீடியோ காட்சியை யூ டியூபில் 47 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எந்த விலங்குகளை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் அவற்றை உடனடியாக கொன்று சாப்பிடுங்கள். இது போன்று கொடூரமான முறையில் கொலை செய்ய வேண்டாம். இது நீண்ட காலத்திற்கு வலியை ஏற்படுத்துகிறது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

[embedyt] https://www.youtube.com/watch?v=GZrF7wjgXhA[/embedyt]