மத்திய பிரதேசம் பலகாட் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராக சுரேஷ் யாதவ் என்பவர் இஸ்லாமியர் குறித்து மோசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இரு பிரிவினர்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்ட முயன்றதற்காக கைது செய்யப்பபட்டார். இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 600 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காவல்நிலையத்தை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதும் சுரேஷ் யாதவை கைது செய்த காவலர்கள் மீதே கொலைமுயற்சி வழக்கு பாய்ந்ததும் நினைவிருக்கலாம்.
வெளியிடப்பட்ட வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட படம்
சுரேஷ் யாதவை கடுமையாக தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஒரு பக்கம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், தவறு செய்த சுரேஷ் யாதவை சட்டப்படி கைது செய்ததற்காகவே நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஆளும் வர்க்கத்தால் பழிவாங்கப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் உண்மையில் சுரேஷ் யாதவ் தாக்கப்படவே இல்லை என்பதை மெய்ப்பிக்கும் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேஷ் யாதவ் ஜம்தார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது கைகளில் ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.
ஆனால் போலீஸ்காரர் ஒருவர் சுரேஷ் யாதவுக்கே தெரியாமல் எடுத்த வீடியோ ஒன்று சுரேஷ் யாதவின் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. போலீஸ் நிலையத்தில் அவர் கேஷுவலாக உலவுவதும், அவரது உடைகளை தானே கழற்றுவதுமான காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
முந்தைய செய்தி:
மதவெறி ஆர்.எஸ்.எஸ் பேச்சாளார் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படும் போலீசார்