டெல்லி
இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் 2 நாட்கள் பயணமாக கேரளாவுக்கு செல்ல உள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் (அதாவது ஜூலை 6 மற்றும் 7) ஆகிய 2 நாட்கள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் மற்றும் அவருடைய மனைவி சுதேஷ் தன்கார் இருவரும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
பயணத்தின், முதல் நாளில் இந்திய விண்வெளி மையம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் (ஐ.ஐ.எஸ்.டி.) 12-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
அடுத்த நாள் கொல்லம் மற்றும் அஷ்டமுடி பகுதிகளுக்கு துணை ஜனாதிபதி தன்கார் செல்கிறார். இந்த தகவலை துணை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
Patrikai.com official YouTube Channel