சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைகிறது.
இந்தப் படத்தில் ஹீரோயினாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படத்தில், விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக, விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘விடுதலை’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சூரி மற்றும் விஜய்சேதுபதியின் தோற்றத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்து வருவதாகவும் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் @VetriMaaran அண்ணனுக்கும் இசைஞானி ஐயா #ilaiyarajasir அவர்களுக்கும் @elredkumar சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏
புதிய பரிமாணத்தில் மாமா @VijaySethuOffl இனைவதில் மகிழ்ச்சி❤️😊@VelrajR @mani_rsinfo @rsinfotainment pic.twitter.com/9vJdWtglI0— Actor Soori (@sooriofficial) April 22, 2021