சென்னை

மூத்த வரலாற்று ஆசிரியர் எஸ் முத்தையா உடல் நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார்.

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் என் எம் சுப்பையா சேட்டியாரின் மகனாக 1939 ஆம் வருடம் பிறந்த எஸ் முத்தையா கொழும்புவில் கல்லூரி படிப்பை முடித்தார்.

அத்துடன் இவர் கொழும்பு நகர முதல்வராக பணியாற்றி உள்ளார். புகழ் பெற்ற அமெரிக்க பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், சண்டே ஸ்பெஷல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி உள்ளார்.

முத்தையா சென்னை வரலாறு, இலங்கை வரலாறு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார். சென்னையின் பாரம்பரியத்தை இவர் தனது நூல்கள் மூலம் வெளிக் கொணர்ந்தவர் என கூறலாம். சென்னையின் பழமையை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தில் முத்தையா செயல்பட்டு வந்தார்.

செனை மெரினா கடற்கரையில் உள்ள பழமை வாய்த டிஜிபி அலுவலகம் இடிக்கப்படுவதை முத்தையா தடுக்க முன் நடவடிக்கை எடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இன்று முத்தையா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு தற்போது 89 வயதாகிறது.

முத்தையாவின் மனைவி வள்ளியம்மை ஆச்சி கடந்த 2013 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். முத்தையாவுக்கு ரஞ்சனி, பார்வதி என இரு மகள்கள் உள்ளனர்.