சென்னை: தமிழ்நாடு காவல்துறையினன் தலைமை அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணியாற்றி வருமஅபய்குமார் சிங்-கை தமிழ்நாடு அரசு  பொறுப்பு டிஜிபியாக   நியமனம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த  வெங்கட்ராமனுக்கு, நீதிமன்றம், அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் விமர்சனம்,  ஆளும் கட்சியினரின் அதிகாரம் போன்ற   பல முனைகளில் இருந்து வந்த ஏற்பட்ட கடுமையான பணி அழுத்தம் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர்  15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து,   அவருக்கு பதில்  பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, உள்துறைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள ஜி.ஓ.வின்படி, டிசம்பர் 9 மற்றும் 23-ஆம் தேதிகளில் இருந்து 15 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான தகுதிக்கு உட்பட்டு  வெங்கடராமனுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், தமிழ்நாடு, சென்னை (i/c) DGP/HPF ஆக திரு. சிங் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]