வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்..
அரசியலைத் தாண்டி, இலக்கியத்தில் எதுகை –மோனையுடன் பேசுவதில் வல்லவர், நமது குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அங்குள்ள தெலுங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த ‘’ உலக தெலுங்கு கலாச்சார தினத்தை’’ யொட்டி அவர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது வெங்கையா நாயுடு, ’’ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வதோடு, தாய்மொழியில் புலமை பெறுவதும் அவசியம்’’ என்று வலியுறுத்தினார்.
‘தாய்மொழி ஒரு மனிதனின் அடையாளம் ‘’ என்று குறிப்பிட்ட அவர் ‘’ சந்தர்ப்பம் கிடைக்கும் போது மற்ற மொழிகளையும் பயின்று கொள்ள வேண்டும்- பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது பல்வேறு வாய்ப்புகளை ஒருவருக்கு உருவாக்கும்’’என்றார்.
’’ நான்கு ‘’ M‘ களை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும்’’ என்று கூறிய வெங்கையா நாயுடு’ அந்த நான்கு ‘’M ‘’ எது என்பதை தனக்கே உரிய எதுகை மோனையில் குறிப்பிட்டார்.
‘’MOTHER ( அன்னை), MOTHER LAND ( அன்னை பூமி), MOTHER TONQUE ( தாய் மொழி), MENTOR ( குரு) என்று வெங்கையா நாயுடு விளக்கினார்.
தமிழில் இதனைத் தாய், தாய் நாடு, தாய் மொழி, ஆசிரியர் என்று குறிப்பிடலாம் தானே?
-பா.பாரதி.