
காலடி, கேரளா
பழங்காலத்திலேயே நமது நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி, கண் புறை அறுவை சிகிச்சை போன்றவைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பண்டைய காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளதாக பாஜகவின் தலைவர்கள் பலர் பேசி வருகின்றனர். திரிபுரா முதல்வர் மகாபாரதக் காலத்திலேயே இணைய தளம் இருந்ததாக கூறியதை வைத்து பலரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். அதே போல் புஷ்பக விமானம் என நமது புராணங்களில் கூறப்படுவதே அந்த கால ஆகாய விமானம் எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.
நேற்று கேரளாவில் உள்ள காலடி நகரில் அமைந்துள்ள ஆதி சங்கரா பொறியியல் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் துணைப் பிரதமர் வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அந்தக் விழாவில் அவர் சிறப்புரை ஆற்றினார்.
வெங்கையா நாயுடு தனது உரையில், “நாம் அந்தக் காலத்திலேயே எஃகு உலோகங்களை செய்யவும் துத்த நாகத்தை உருக்கவும் தெரிந்து வைத்திருந்தோம். பழங்கால இந்திய மருத்துவர்கள் பல கடினமான அறுவை சிகிச்சைகளை நிகழ்த்தி உள்ளனர். பிளாஸ்டிக் சர்ஜரி, மற்றும் கண் புறை நீக்கம் ஆகிய அறுவை சிகிச்சைகளை நமது முன்னோர்கள் மிக எளிதாக செய்துள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]