காரகாஸ்:

ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷியா உருவாக்கி உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிதான், இதுவரை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி என்று வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-

மற்ற கொரோனா தடுப்பூசிகளால், 4 மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். ஆனால், ஸ்புட்னிக் தடுப்பூசியால் 2 ஆண்டுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்று அதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.

சோவியத் யூனியன் உருவாக்கிய தடுப்பூசிகள், உலகம் முழுவதும் தீவிர நோய்களை குணப்படுத்தி உள்ளது. சோவியத் யூனியனின் வாரிசான ரஷியாவும் அதே அனுபவத்தை பயன்படுத்தி, இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.வெனிசுலா மக்களுக்கு போடுவதற்காக, ஏப்ரல் மாதம் ஸ்புட்னிக் தடுப்பூசி கிடைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.