வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள் அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது.
மேலும் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அமெரிக்கா நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டதற்கு ரஷ்யா, சீனா, கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தங்களுக்கு ஏற்ற புதிய அரசு அமையும் வரை, அமெரிக்காவே அந்த நாட்டையும் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பையும் நிர்வகிக்கும். என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் இறையாண்மை மீதான இந்த தாக்குதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து 7 நாடுகள் மீது 600 வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
டிரம்ப்-பின் இந்த போர் வெறியைக் கண்டித்து நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்க நகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த செயலை பொத்தாம் பொதுவாக கண்டித்துள்ள நிலையில் வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது.
[youtube-feed feed=1]