வேலூர்:
வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. வரும் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெறும் பிரசாரம் என்று தேர்தல் அறிவித்தது. அதையடுத்து அங்க தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்தன.
தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் , ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.
அங்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்பட கட்சித்தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன்ர்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமானவை – 133 என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார். இன்றைய தேர்தலில் வாக்களிக்க 14.32 லட்சம் பேர் தயாராக உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று வாக்குப்பதிவு காரணமாக வெளியூர்களில் இருந்து தேர்தல் பணிக்கு வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வேலூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.