சென்னை: வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பதவி ஏற்றது முதல் இதுவரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மாற்றப் பட்டு உள்ளனர். ஏற்கனவே பலமுறை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமனம்.
புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம்.
கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம்.
நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம்.
நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணனுக்கு பதில் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.