சென்னை,

வேளச்சேரியில் தனியார் சொகுசு பேருந்து அதிபர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேளச்சேரி சீதாபதி நகர், வி.ஜி.பி. அவென்யுவில் வசித்து வருபவர்  தமிழன். இவர் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதைத்தொடர்ந்து வேளச்சேரி போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி அளவிலான புதிய 500 மற்றும் ரூபாய் நோட்டு கட்டுக்களை கைப்பற்றப்பட்டன.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும், முன்னுக்கு பின் முரணாக பேசியதாலும் அவரையும், பணத்தையும் கைப்பற்றி வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழனிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.