ஊட்டி, கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தவிர, இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானல் சுங்கச்சாவடியில் தற்போது இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் பெருமாள் மலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.