சென்னை

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வ்ருவதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

தொடர்ந்து 4 நாட்கள் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் மற்றும் தொழில் செய்யும் மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த புதன்கிழமையே செல்ல தொடங்கினர்.

மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊரில் மக்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி தற்போது தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதி. சென்னை நோக்கி செல்லும் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் வந்து நிற்கும் முன்பே அதில் போட்டிபோட்டுக்கொண்டு இடம் பிடிக்க மக்கள் அலைமோதுகின்றனர் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன.

காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் அனுப்பி வைக்கின்றனர். ஆயினும் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்க உள்ளதால் இன்றிரவு மேலும் இரு மடங்கு வாகனங்கள் சென்னை நோக்கி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, இதை சீர் செய்ய கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள்னர்.