சென்னை: மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு  போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வந்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கவில்லை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குருசாமி பாலம் அருகே உள்ள சேத்துப்பட்டு குசாலாம்பாள் கல்யாண மண்டபத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. 100 அடி சாலையில் பெரியார் பாதை பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனமாக ஓட்டுங்கள் என தெரிவித்து உள்ளது.

சென்னையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக, தங்களது வாகனங்கள் கடந்த 2015 மழை வெள்ளத்தின்போது சேதமடைந்தது போல  சேதமடைவதை தவிர்க்க வேளச்சேரி மேம்பாலம் உள்பட பல மேம்பாலங்களில் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். இதற்கு போக்குவரத்து காவல்துறை  எதிர்ப்பு தெரிவித்ததுடன், வாகனங்களுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தது. அது தொடர்பாக நோட்டீசம் வழங்கியது. ஆனால், பலர், அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர். திமுக அரசு இதுவரை மழைநீர் தேங்குவதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என  பலர் கடுமையாக  விமர்சித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது. அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு  மறுப்பு தெரிவித்து போக்குவரத்து காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கப்படுவதாக பரவும் செய்தி, வதந்தி மட்டுமே. அப்படி எதுவும் வசூலிக்கப்பட வில்லை. அதேநேரம் கனமழை எச்சரிக்கை காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மழை காலங்களில் மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்காக அருகில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவகின்றனர். போக்குவரத்து சம்பந்தமான உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வரும் பருவமழைக்கு நமது நகரம் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் சோதனை நடத்தினர். 🌧️ பாதுகாப்பாக இருப்போம் மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ளது.

மேலும் அவரச தேவைக்கு பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. அந்தவகையில் சென்னை தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் 044 23452362 என்ற எண்ணிலும், வடக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுமக்கள் 044 23452330 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.