சென்னை
வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக வாகனங்களை மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வரும் மே 11 ஆம் தேதி அன்று வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்று தமிழ்ககாவல் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்களை எழுப்பக் கூடாது, ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.