
திருப்பூர்: திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கெண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற மூன்று கண்டெய்னர்களை திருப்பூர் செங்கப்ள்ளி அருகே பறக்கும்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 570 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை நடந்த வாகன சோதனைகளில் பிடிபட்ட மிக அதிகமான தொகை இதுவே.
எந்த வித ஆவணங்களும் இல்லாமல் எடுத்துச்சொல்லப்பட்ட இந்த 570 கோடி ரூபாய் பணம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel