
சென்னை:
வீராணத்திலிருந்து குடிநீர் வரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் சென்னையில் அடுத்தடுத்து வரும் நாட்களில் கடும்குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடலூரில் இருக்கும் வீராணம் ஏரி வறண்டுவிட்டதால், குடிநீருக்காக சென்னைக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. ஆனால், மாற்று ஏற்பாடாக என்.எல்.சி சுரங்க நீர், சென்னைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 1,500 கன அடியிலிருந்து 1,300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel