சென்னை:

பிரபல ஓவியர் வீரசந்தானம் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 71.

வீரசந்தானம்,  சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக சேர்ந்தார். பின்னர்  தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கத்தில்  விருப்ப ஓய்வு பெற்றார்.

ஈழத்தமிழர் ஆதரவு கூட்டங்களில் பங்குகொண்டு முழங்கினார். தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் உருவானதில் முக்கிய பங்குவகித்தார்.

கடந்த வருடம் அவருக்கு உடல்நல  குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்றார்.  நோயிலிருந்து மீண்டவருக்கு சமீபத்தில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில்  இன்று மாலை காலமானார்.