மதுரை: வேடசந்தூர் தொகுதியைச் சேர்ந்த  காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ  தண்டபாணி காமானார். வயது 75. அவருக்கு  காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், கடந்த 2006ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.தண்டபாணி . 75 வயதாகும் அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் நலம் பாதிக்கப்பட்டு,  கடந்த சில மாதங்களாகவே   வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல் பயணத்தை துவக்கிய எம்.தண்டபாணி, 1986ல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர் 1996ல் மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருந்தார்.

2006ம் ஆண்டு முதல் 20011ம் ஆண்டு வரை வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிவந்த இவர், பின்னர் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.

உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று அக்டோபர் 27ம் தேதி மாலை உயிரிழந்தார்.

முன்னாள் எம்எல்ஏ எம்.தண்டபாணியின் உடல் அவரது சொந்த ஊரான வேடசந்தூர் அருகே உள்ள மல்லிகாபுரம் கிராமத்தில் இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.