சென்னை

மிழக ஆளுநரை விஜய் சந்தித்தது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அளித்த மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் வலைதளத்தில்

”தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பா.ஜ.க. அரசியல் செய்வது வழக்கம்.

இப்போது த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது.

ஆளுநர் ரவி அவர்களை, விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் அரசியல்.

என்று பதிவிட்டுள்ளார்.