கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘துருவங்கள் பதினாறு’.
இதனைத் தொடர்ந்து ரீமேக் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன.
தற்போது ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இந்தி ரீமேக் தொடங்கப்படவுள்ளது. சாஜித் நாடியவாலா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு ‘சங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரகுமான் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கவுள்ளார்.