புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராகவும் அப்பகுதியில் தொழிலதிபராகவும் உள்ளார்.

இன்று காலை 5 மணிக்கு இவர் வழக்கம்போல் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு பொலிரோ காரில் வந்த ஐந்து மர்மநபர்கள் அவரை காரில் கடத்தியுள்ளனர்.
இதனிடையே நடைபயிற்சிக்குச் சென்ற தனது தந்தை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மணிகண்டன் தந்தையை காணவில்லை என கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் சந்திரசேகரனை மீட்ட தனிப்படை போலீசார் விஏஓ உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.