சன் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் படம் ‘வணக்கம்டா மாப்ள’.

இப்படத்தில் ஜிவியுடன் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் தனுஷ் பாடியுள்ள பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த படத்தின் டப்பிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதுகுறித்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கப்பலில் பணியாற்றுபவராக நடித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து தனது முந்தைய பட பாணியில் இத்திரைப்படத்திற்கும் இயக்குநர் எம்.ராஜேஷ் கதை அமைத்திருப்பது ட்ரெய்லர் காட்சிகளில் தெரிகிறது.