‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.
ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது.
சமீபத்தில் இந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஜே.ஜே.பெட்ரிக் மாற்றப்பட்டு பிரசாந்தின் தந்தையே இயக்குவார் என்றும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று படக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் சந்தோஷ் நாராயணனின் பெயர் இடம்பெறவில்லை. எனவே இசையமைப்பாளரும் மாற்றப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் அந்தாதுன் திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ‘அந்தகன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனிக்கு தான் ஜோடியாக நடிப்பதை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.