பிக் பாஸ் சீசன் 3 மூலம் ஏகத்துக்கும் பிரபலமானார் வனிதா விஜயகுமார் . தற்போது அவரை தேடி பட வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து பாம்பு சட்டை படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கிறார்.

அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாம்.

லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கினார். அந்த சேனலை துவங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . பின் பெரும் சர்ச்சைக்கு பிறகு தற்போது விலகியுள்ளார் .

பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், நடைக்கடை மனிதர் ஹரி நாடாருடன் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே இன்னுமொரு முக்கியப் படத்தில் வனிதா நடிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த், மற்றும் நடிகை சிம்ரன் நடிக்கிறார்கள். இதனை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்ககளை பிரசாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் கமெண்ட் செய்த வனிதா, படக்குழுவினரோடு இணைய தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]