ராய்பிரேலி

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடந்த கல்வீச்சில் ஒரு சிறுவன் காயம் அடைந்துள்ளான்.

அடிக்கடி வடமாநிலங்களில் பந்தே பாரத் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வந்தே பாரத் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

ராய்பிரேலி அருகே இந்த வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.  கல், வந்தே பாரத் ரெயிலின் கண்ணாடியின் மீது பட்டு, கண்ணாடியை உடைத்து கொண்டு ரெயிலுக்கு உள்ளே சென்றது

இதனால் பயணம் செய்த ஒரு சிறுவனை அந்த கல் தாக்கி அச் சிறுவன் காயம் அடைந்துள்ளான். வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.