மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1’ கார்ப் பந்தயத்தில், ஃபின்லாந்து நாட்டின் வால்டேரி போட்டாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், மெர்சிடஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்தப் போட்டி, கடந்த மார்ச் மாதமே நடைபெறவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, இப்போட்டி உட்பட, வேறுபல போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் துவங்கியது.
இத்தொடரில், மெர்சிடஸ், ஃபெராரி உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் பந்தய தூரம் 306.452 கி.மீ. ஆகும்.
இப்போட்டியில், ஒவ்வொரு அணியும் ஆக்ரோஷத்துடன் பங்கேற்றன. இறுதியில், மெர்சிடஸ் அணியில் இடம்பெற்ற ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டேரி, பந்தய தூரத்தை 1 மணிநேரம் 30 நிமிடம் 55.739 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
அதேசமயம், அதே மெர்சிடஸ் அணியில் இடம்பெற்ற நடப்பு உலக சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வெல்வார் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் 4வது இடமே பிடித்தார்.