ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, “வலிமை” படத்தைப் பற்றிய தகவலுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனையொட்டி “வலிமை” படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்னர்.

“வலிமை” மோஷன் போஸ்டரை, படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

“வலிமை” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் “வலிமை” திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது,