டில்லி :
உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ தம்பி நீ, என்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து ஹர்பஜன் சிங் டிவிட் பதிவிட்டு உள்ளார்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது 82 அடியில் சிக்கி இருக்கும் சுஜித்தை, 110 அடியில் குழி தோண்டி, சுரங்கம் அமைத்து மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று சேவ் சுர்ஜித் என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்காகி வருகிறது. மேலும் அனைத்து தரப்பினரும் குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
குழந்தையை மீட்க அதிகாரிகள் தொடர்ந்து 36 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரும், சிஎஸ்கே அணியின் வீரரும், தமிழர்கள் மீது பாசம் உள்ளவருமான ஹர்பஜன் சிங், குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்று டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அதில், நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.
தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. என்று வேதனையோடு டிவிட் பதிவிட்டு உள்ளார்.