சென்னை:
சுங்கக்சாவடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன் நேற்று முதன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.
அவரை புழல் சிறைக்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி சென்ற வேல்முருகனை போலீசார், சுங்கச்சாவடி வழக்கில் கைது செய்தனர்.அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட வேல்முருகன் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது அவரது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. புழல் சிறைக்கு சென்று வேல்முருகனை சந்தித்து பேசினார்.