ஜெனீவா:
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசினார்.

அப்போது அவரது பேச்சுக்கு சிங்களர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று நடந்த கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். அவருக்கு ஐ.நா.பாதுகாப்பு படையினர் சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர்.
Patrikai.com official YouTube Channel