நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களது முகநூல் பதிவு:
சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்ற நீண்டகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்விடம் நல்ல தீர்ப்பை பெற்றிருக்கிறார்..
இந்த வழக்கை பார்க்கும்போது. அவருக்கு எதிரே உள்ள தரப்பு எவ்வளவு இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுத்திருக்கிறார்கள்
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக பரவிவிட்டதால், அதை அகற்றி வேறு மரங்களை வைக்கை வாய்ப்பே இல்லை என்று அறிக்கை தருகிறது நிபுணர் குழு,.
செலவும் காலமும் அதிகம் பிடிக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம்..முடியவே முடியாது என்று சொல்வதற்கு நிபுணர்குழு எதற்கு,? தெருவில் போகிற சாமான்யனை கேட்டாலே இதனை சொல்லி விடுவானேன்..
சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்றுவ தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம; எந்த அளவு அகற்றப்பட்டு இருக்கின்றன என்ற அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.. வழக்கை அக்டோபர் 13ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
இந்த சட்டப்போராட்டத்தை நடத்துபவர்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது நீதிமன்றம். .தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பாற்ற வழிவகுக்கும் இந்த விஷயத்தில் முற்றிலும் பாராட்டுக்கு தகுதியானவர் வைகோ..
அரசு தரப்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது உட்பட பல விஷயங்களுக்கு மேலும் அவரின் பணி தொடர்ந்துகிடைக்கவேண்டும்..
போலியோ என்ற நோய்க்கொடுமை, ஒரு காலத்தில் இருந்தது..அதையே இல்லாமல் போகச்செய்தோமே நாம்.. ஏழரை கோடி மனித வளமுள்ள மாநிலத்தில் சீமை கருவேல மர அழிப்பெல்லாம் சாத்தியமே