லாக்கப் படத்திற்கு பிறகு வைபவ், வாணி போஜன் இணைந்து நடிக்கும் நகைச்சுவை படத்தை பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்குகிறார் .

இப்படத்தில், வைபவ், வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு, பிரேம்ஜி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.