சென்னை:

றநிலையத்துறை உத்தரவுபடி இன்று சென்னை வடபழனி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் செய்து மழைக்காக வேண்டினர்.

தமிகத்தில் கடந்த சில ஆண்டுகளாக  பருவமழை பொய்த்ததால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 1ந்தேதி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல கோவில்களில் மழைக்காக சிறப்பு யாகம் நடைபெற்று வரும் நிலையில், இன்று முருகனின் திருத்தலங்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

சுமார்  3 மணி நேரம்  நடைபெற்ற சிறப்பு  வருண ஜெப யாகத்தில், 16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதே போல, ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண யாகம் நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் சிறப்பு வருண பூஜை நடைபெற்றது. யாகத்தின் போது குழல் ஒலி, யாழ் ஒலி மற்றும் மிருதங்கங்கள் வாசிக்கப்பட்டன.

தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள வருணபகவானுக்கு மழை வேண்டி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  மழை வேண்டி கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு வருண யாகமும் நடந்தது.

தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள வருணபகவானுக்கு மழை வேண்டி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி வருண யாகம் மற்றும் அசுர ஹோமம் யாக பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்றது.