லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.

இந்த வீடியோ வெளியாகி தற்போது வரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.