கிருஷ்ணகிரி: வானும் மண்ணும் 2023′ என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் 2நாள் சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி நோக்கி வாருங்கள் என அக்ரிசக்தி வேளாண் அமைப்பு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாய ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அக்ரிசக்தி அமைப்பின் சார்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் மற்றும் வேளாண் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மின்னிதழ் மற்றும் 65 இதழ்களை வெளியிட்டுள்ளது. இது பலதரப்பட்ட வேளாண் ஆர்வலர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகளையும் அக்ரிசக்தி இணையம் வழியாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, வருகிற ஜனவரி 7 மற்றும் 8, 2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் வானும் மண்ணும் 2023” சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாட்டினை கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ பள்ளியில் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

இந்த மாநாட்டில்,  இம்மாநாட்டில் ஆய்வரங்கம், கருத்தரங்கம், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிலரங்கங்கள், விஞ்ஞானிகள்-விவசாயிகள் கேள்வி பதில் அரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது. ஆய்வரங்கங்களில் சிறப்பாக உரையாற்றும் ஆய்வாளர்களுக்கு சிறந்த உரை விருதுகள் ஒவ்வொரு அமர்வுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

விவசாய ஆய்வாளர்கள் நம் தாய் மொழியான தமிழ் மொழியில் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் கட்டுரைகளை தொகுத்து ISBN எண்ணோடு மின் புத்தகமாக வெளியிடும் நோக்கத்தில் உள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் வெளியிடப்படும் புத்தகமானது தமிழ் வழியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,  இந்த மாநாட்டில்,  சிறப்பு வாய்ந்த நிறுவனத்தின் பேராசிரியர்கள், ஆய்வாளார்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஊக்குவிக்குமாறு அன்போடு அழைப்ப தாக தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  2024 ஆம் ஆண்டு பொங்கலுக்குள் கிராமத்து விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கிட உதவும் ஒரு முன்முயற்சிதான் வானும் மண்ணும் 2023” சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாட்டடு.  அதை 2023ன் துவக்கத்தில் இருந்து தொடங்குகிறோம்.

ஆடுகளம் – ஆரம்ப நிலை விவசாய தொழில் முனைவோரை கண்டறிந்து ஊக்குவித்தல்
பொது மக்கள் குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுக்கள்
உழவர் வளம் : மக்கள் நலம் | கிருஷ்ணகிரி நோக்கி வாருங்க!!!

என்ன செய்கிறோம் ?

அனைவரும் வாருங்கள் இது அடுத்த தலைமுறையினருக்கு விவசாயத்தை அறிமுகம் செய்யும் மாநாடு

ஆய்வரங்கம்:
விவசாயத்தில் சமீபத்தில் என்ன மாதிரியான ஆய்வுகள் நடக்கிறது என்பதை அறிய ஆய்வரங்கம். இதில் விவசாய மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை படைக்கின்றனர்.

பயிலரங்கம்:
நாட்டு ரோசாவில் மதிப்பை கூட்டி விற்பனை செய்தல்,
பனை பொருட்களில் கைவினை பொருட்களை உருவாக்குதல் கண்ணில் படும்
முலிகைகளை காசாக்குவது எப்படி போன்ற பயிற்சிகளை கொடுக்கின்றோம்.( சிறு தொகையாக கட்டணம் உள்ளது)

கண்காட்சி அரங்கம்:
விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர், வீட்டு உபயோகப் பொருட்கள்,பனை ஓலை பொருட்கள், பெண்கள் சிறுதொழிலாக உற்பத்தி செய்யும் பொருட்களின் மையம், சிறுதானிய தின்பண்டங்கள் , விவசாய ஈடு பொருட்கள், விதைகள் , போன்றவர்கள் கண்காட்சியில் அரங்கு அமைக்க உள்ளனர், அனுமதி இலவசம்

கருத்தரங்கம்:
கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு சார்ந்த கேள்வி பதில் பகுதியாக இலவச கருத்தரங்கம் உள்ளது

விவசாயிகளுக்கு என்ன தேவை? விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம்

மூலிகைகளின் சந்தை வாய்ப்பு பற்றிய இலவச கருத்தரங்கம்

யார் யார் கலந்துகொள்ளலாம்?

கிராமத்து விவசாயிகளையும், நகர்ப்புற வணிகர்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் (அ) விற்பனை முறையை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே நோக்கம்.

விவசாயிகள், தொழில்முனைவோர், விவசாய மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.

மாநாடு நடைபெறும் இடம் ?

நாள் : 07.01.2021 மற்றும் 08-01-2021
கிழமை : சனி,ஞாயிறு
இடம்: *நாளந்தா CBSE சர்வதேச பள்ளி வளாகம், கிருஷ்ணகிரி (ஆவின் மேம்பாலம் அருகில்)
மத்தூர்)

அனைவரும் கலந்துகொள்ளலாம்.

யாரை தொடர்பு கொள்ளலாம்

மாநாடு பற்றிய தொடர்புக்கு:
கண்காட்சி அமைக்க:
பயிற்சி முன்பதிவுக்கு: 9790388452

மேலும் விபரங்களுக்கு

செல்வமுரளி: 9943094945

https://agrisakthi.com