நீதிமன்ற நடைமுறைகளை விமர்சிக்கும் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது வாய்தா திரைப்பம்.

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. வினோத்குமார் தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில் கதை நாயகனாக மு.ராமசாமி நடித்திருக்கும் படம் வாய்தா. புகழ் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாவதால் எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை படம் சொல்கிறது.

இதனால் படம் சர்ச்சைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

நாளை படம் வெளியாகும் நிலையில், ஸ்நீக் பீக் வெளியாகி உள்ளது.
இதில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இருவர், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் மீது தனது உள்ளாடையை கழற்றி எரிவது போன்ற அதிர்ச்சி காட்சி இடம் பெற்றுள்ளது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பரபப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வாய்தா திரைப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

நாசர், புகழ் மகேந்திரன், பவுலின் ஜெசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

வீடியோ:
[youtube-feed feed=1]