டேராடூன்: உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா இன்று திடீரென தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.அம்மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியாவை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 22ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதை ஆளுநரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்துள்ளார்.